குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை
குடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்,ஜூலை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தேன்ராஜ் மகன் மாடசாமி (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமங்கலம் அருகே உள்ள சித்தாலை கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மாடசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story