குடியிருப்புக்குள் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் பீதி


குடியிருப்புக்குள் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் பீதி
x
குடியிருப்புக்குள் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் பீதி
தினத்தந்தி 9 July 2021 10:11 PM IST (Updated: 9 July 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புக்குள் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் பீதி

வால்பாறை

வால்பாறை நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கடந்த பல மாதங்களாக சிறுத்தைபுலிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. 

சிறுத்தைபுலிகள் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பலரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதால் பொது மக்களிடம் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இதனை உறுதி செய்வதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவின் பேரில் வால்பாறை வனச்சரக வனத்துறையின் சார்பிலும் வாழைத்தோட்டம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

 வனத்துறையினரின் கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தைபுலிகள் நடமாட்டம் பதிவானது. இந்த நிலையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாக பகுதியில் தொடர்ந்து மூன்று சிறுத்தைபுலிகள் நடமாடி வருவது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்புறம் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவில் இரண்டாவது நாளாக பதிவாகியுள்ளது. 

இது குறித்து வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story