வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 July 2021 10:26 PM IST (Updated: 9 July 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட கொலக்கொம்பை மன்னார் சாலை, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் செலவில் போடப்பட்ட ஆரக்கொம்பை சாலை, 

பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அருள்நகரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.1.92 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கட்டியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சமையற்கூடம், உலிக்கல் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம், 

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் கால்வாய் சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, குன்னூர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story