பெண் மாயம்


பெண் மாயம்
x
தினத்தந்தி 9 July 2021 10:45 PM IST (Updated: 9 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

பெண் மாயம்

கீரனூர், ஜூலை.10-
குன்றாண்டார்கோவிலை அடுத்த கூகூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் சந்தியா (வயது 20). இவர் கீரனூரை அடுத்த இளையாவயல் கிராமத்திலுள்ள சித்தி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி புதுக்கோட்டையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பால்ராஜ் கொடுத்த புகாரின்  பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

Next Story