குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை


குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை
x
தினத்தந்தி 9 July 2021 10:54 PM IST (Updated: 9 July 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடு்க்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறினார்.


கள்ளக்குறிச்சி

குற்றசம்பவங்களை தடுக்க

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளி கூட்டரங்கில் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 181 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமை தாங்கி பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 181 இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கி கூறியதோடு, பெண்களுக்கு சட்டம் உதவி பாதுகாப்பு, மருத்துவம் சார்ந்த உதவிகள்,  மனநல  ஆலோசனைகள்,  அரசின் நலதிட்டங்கள் ஆகியவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். 

அதிகபட்ச தண்டனை

தொடர்ந்து பெண்களுக்கான உதவி மைய எண் 181 என்ற இலவச தொலைபேசி எண்ணின் பயன்களை பற்றி கூறிய அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தீவிரமாக கண்காணித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், ரவிச்சந்திரன், சுப்புராயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மாவட்ட பெண்கள் மேம்பாட்டு திட்ட இயக்குநர் தேவநாதன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆலோசகர் முருகன், 181 இலவச தொலைபேசி எண் ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி, சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story