லாரியில் சிக்கி தலைமை ஆசிரியர் பலி


லாரியில் சிக்கி தலைமை ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 9 July 2021 10:55 PM IST (Updated: 9 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே லாரியில் சிக்கி தலைமை ஆசிரியர் பலியானார்.

விழுப்புரம், 

விழுப்புரம் வழுதரெட்டி நித்தியானந்தா நகர் சாரதாம்பாள் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 53). இவர் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள காந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள பள்ளிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவில் வீட்டிற்கு புறப்பட்டார். விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையம் அருகில் வந்து கொண்டிருந்தார்.

லாரியில் சிக்கி சாவு

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று சிவசங்கரை முந்திச்சென்று திடீரென இடதுபுறம் திரும்பியபோது லாரியின் பின்பக்க டயரில் சிவசங்கர் சிக்கினார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story