கொட்டகைக்கு தீ வைத்தவர் கைது


கொட்டகைக்கு தீ வைத்தவர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 11:02 PM IST (Updated: 9 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கொட்டகைக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே திருவுடையார்பட்டியைச் சேர்ந்தவர் சாத்தையா (வயது 63). இவரது மகள் முத்துமாரியை கீழப்பட்ட மங்கலத்தை சேர்ந்த செல்வம் திருமணம் செய்து உள்ளார். குடும்ப தகராறு காரணமாக முத்துமாரியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இது தொடர்பாக முத்துமாரி திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இதனால் போலீசார் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். ஆத்திரம் அடைந்த செல்வம் திருவுடையார்பட்டிக்கு வந்து சாத்தையா வீட்டு அருகே உள்ள கொட்டகைக்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டார். இதில் கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து திருப்பத்தூர் போலீசில் சாத்தையா கொடுத்த புகாரின் பேரில் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story