கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
நார்த்தாமலை வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
கீரனூர், ஜூலை.10-
நார்த்தாமலை வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
வனப்பகுதி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நார்த்தாமலை தற்காலிக பஸ்நிலையத்தையொட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு ஒரு பெண் தூக்கில் தொங்கியவாறும், ஒரு ஆண் தரையிலும் இறந்து கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு ஆடுமேய்க்கும் தொழிலாளர்கள் மூலம் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இறந்து கிடந்த ஆணின் சடைப்பையில் ஒரு செல்போனும் மற்றும் பெண்ணின் அருகே ஒரு கடிதமும் கிடந்தது. செல்போனை தொடர்பு கொண்டதில் இறந்து கிடந்த ஆண் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த அப்துல்லா மகன் அப்துல்ஆசாத் (வயது 43) என்றும், பிணமாக கிடந்த பெண் வடவாளம் தெற்குராயப்பட்டியை சேர்ந்த ராமன் மனைவி கண்ணம்மாள் (40) என்றும் தெரியவந்தது. மேலும் அங்கு 2 விஷபாட்டில்களும், கண்ணம்மாள் கையொப்பமிட்ட ஒரு கடிதமும் கிடந்தன. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றினர்.
3 வருடமாக பழக்கம்
அந்த கடிதத்தில் கண்ணம்மாள் கூறியிருப்பதாவது:-
எனக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கும், அப்துல் ஆசாத் என்பவருக்கும் 3 வருடமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் அப்துல் ஆசாத்தின் தந்தை அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் எனது வீட்டிற்கு காரில் ஆட்களுடன் வந்தனர். பின்னர், தகாதவார்த்தையால் பேசி என்னை தாக்கினார்கள். இதேபோல் 2-வது தடவையும் என்னை அடித்தது மட்டுமின்றி கேவலமான வார்த்தைகளை சொல்லி திட்டினர். இதனால் என் வீட்டார்கள் மற்றும் ஊரார்கள் மத்தியில் மிகவும் அசிங்கமாக போய்விட்டது.
தொந்தரவு செய்யக்கூடாது
என்னால் அவர்கள் எந்த தொந்தரவும்படக்கூடாது என்பதற்காக நான் வீட்டைவிட்டு வந்துவிட்டேன். என் வீட்டார்களிடம் அப்துல்லா குடும்பத்தார்கள் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். என் குழந்தைகள் மற்றும் கணவர் வீட்டார்களை எந்த தொந்தரவும் கொடுக்காமல் இருக்க வழிவகை செய்யவேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கண்ணம்மாள் கூறியிருந்தார்.
விசாரணை
பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவரம் அனைவருக்கும் தெரிந்ததால் அப்துல் ஆசாத்து விஷம் குடித்தும், கண்ணம்மாள் தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்து கொண்டது, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் தகவல் தெரிவித்தபோது, அப்துல் ஆசாத்தின் உடலை பெற உறவினர்கள் நேரில் வருவதாகவும் கூறினர். ஆனால் கண்ணம்மாளின் உறவினர்கள் உடலைபெற நாங்கள் யாரும் வர மாட்டோம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story