கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்


கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 9 July 2021 11:04 PM IST (Updated: 9 July 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தேனி : 

விருதுநகர் மாவட்டம் கிழவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருடைய தந்தை தேனி மாவட்டம் வருசநாடு அருகே பாலசுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வத்தின் தந்தை உயிரிழந்தார். 

இந்த நிலையில் தந்தையின் இறுதி சடங்கிற்காக செல்வம் பாலசுப்பிரமணியபுரத்துக்கு வந்தார். பின்னர் நேற்று காலை அவர் ஊருக்கு புறப்பட்டார். அப்போது பஸ்சில் செல்லாமல் வருசநாடு அருகே காமராஜபுரத்தில் இருந்து கிழவன்கோவிலுக்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்றார். 

அப்போது வனப்பகுதியில் புதரில் மறைந்து இருந்த கரடி செல்வத்தை சரமாரியாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த செல்வம் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடி தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story