பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 July 2021 11:10 PM IST (Updated: 9 July 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

கடையை காலி செய்யும் விவகாரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

தேவகோட்டை,

 காரைக்குடி தாலுகா பாடத்தான்பட்டி நாகவயலைச் சேர்ந்தவர் ஸ்டெல்லாமேரி. இவருக்கு சொந்தமாக 16 கடைகள் அடங்கிய காம்ப்ளக்ஸ் தேவகோட்டை ரஸ்தா நாகவயல் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் சூப்பர்மார்க்கெட் கட்டுவதற்கு திட்டமிட்டு கடைகளில் வாடகைக்கு இருந்தவர்களை ஸ்டெல்லாமேரி காலி செய்யும்படி கூறி உள்ளார். அனைவரும் கடையை காலி செய்தநிலையில், தேவகோட்டை தானவயல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் மட்டும் கடையை காலி செய்ய மறுத்து அவரது மனைவி யசோதை உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டெல்லாமேரி அளித்த புகாரின் பேரில் ரமேஷ்பாபு, யசோதை ஆகியோர் மீது சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story