அனுமதியின்றி எம்.சாண்ட் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்


அனுமதியின்றி எம்.சாண்ட் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 9 July 2021 11:11 PM IST (Updated: 9 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே அனுமதியின்றி எம்.சாண்ட் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காங்கேயம்
காங்கேயம் அருகே அனுமதியின்றி எம்.சாண்ட் மண் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாகன சோதனை
காங்கேயம் தாலுகா பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண், மணல், ஓடக்கற்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும், அத்துடன் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் ஏற்றி செல்லப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அத்தகைய அனுமதியின்றி மண், மணல் ஏற்றி வரும் லாரிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காங்கேயம் அருகே கரூர் சாலையில் உள்ள முத்தூர் பிரிவு பகுதியில், மாவட்ட உதவி புவியியலாளர் லட்சுமிராம்பிரசாத் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரி பறிமுதல் 
இதில் உரிய அனுமதியில்லாமல் அந்த லாரியில் எம்.சாண்ட்  ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியைப் பறிமுதல் செய்து காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து உதவி புவியியலாளர் கொடுத்த புகாரின் பேரில் எம்.சாண்ட் லாரியை ஓட்டிவந்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ் (வயது 40), லாரி உரிமையாளரான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (37) ஆகிய 2 பேர் மீது காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story