ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ெபங்களூரு பெண் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம்
ெபங்களூரு பெண் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே அன்னான்டபட்டி அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 25). இவர், அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த சங்கரின் மகள் சந்தியா (22) அன்னான்டபட்டியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது ஒரு ஆண்டாக இருவரும் காதலித்தனர். அவர்களின் காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா அன்னான்டபட்டிக்கு வந்து காதலனை சந்தித்தார்.
இருவரும அன்ேற திருப்பத்துார் அருகே உள்ள ஒரு முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சந்தியா தனது காதல் கணவருடன் செல்வேன், எனக் கூறினார். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் எழுதி வாங்கி கொண்டு சந்தியாவை அரவிந்தனுடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story