ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தை பா ஜ க வினர் முற்றுகை
பணித்தள பொறுப்பாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரிஷிவந்தியம்
ஊரக வேலை உறுதி திட்டம்
பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏற்கனவே பணி செய்து வந்த பணித்தள பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு தி.மு.க.வினரை நியமித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பா.ஜ.க. ஒன்றியத் தலைவர்கள் சுந்தர் மற்றும் சேகர் ஆகியோர் தலைமையில் கட்சியினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி கொடியுடன் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பணித்தள பொறுப்பாளர் பணிக்கு சரியான பயனாளிகளை சேர்க்க வேண்டும் எனவும், மாட்டுக் கொட்டகை, ஆட்டுக் கொட்டகை திட்டத்தை தகுதி வாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க வேண்டும், தூய்மை இந்தியா திட்டத்தில் ஏற்கனவே உள்ளவர்களே நீடிக்க வேண்டும், புதிதாக ஆட்களை நியமிக்க கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் நிறைவேற்றி தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி உறுதி அளித்தார்.
இதையடுத்து பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story