மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி
மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி
நெமிலி
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த சூறாவளி காற்றுடன் மழை செய்தது. இதில் அசநெல்லிகுப்பம் கிராமம் அருகில் மின்சார வயர் அருந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் அசநெல்லிகுப்பம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தன்கு சொந்தமான பசு மற்றும் கன்று குட்டிகளை நேற்று மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது அறுந்து கிடந்த மின்சார வயரில் கன்றுக்குட்டி சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணமலை உடனடியாக மற்ற மாடுகளை அவ்வழியாக செல்லாமல் திரும்பி ஓட்டினார்.
உடனடியாக இதுகுறித்து மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த மின்சார ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதுபற்றி தகவலறிந்த அசநெல்லிகுப்பம் கிராமநிர்வாக அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story