எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2021 12:20 AM IST (Updated: 10 July 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர் முஸ்தபா, மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.அப்துல் கரிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மைபா ஜேசுராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டேன் சாமியை மத்திய அரசு உபா சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கு அவர் இறந்தார். இதனை கண்டித்தும், சட்டப்படி மனித உரிமைகளுக்காக போராடியவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஸ்டேன் சாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story