ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி இனிப்பு அலங்காரத்தில் வராகிஅம்மன் அருள்பாலித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி இனிப்பு அலங்காரத்தில் வராகிஅம்மன் அருள்பாலித்தார்.
ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் நேற்றுகாலை தொடங்கியது.
பின்னர் வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான இனிப்புகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அலங்காரம்
வராகி அம்மனுக்கு இன்று (சனிக்கிழமை) மாலை மஞ்சள் அலங்காரமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) குங்கும அலங்காரமும், 12-ந் தேதி சந்தன அலங்காரமும், 13-ந் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14-ந் தேதி மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 17-ந் தேதி கனி அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.
ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story