பழைய ரெயில் பெட்டிகளை மதுரை கோட்டத்துக்கு ஒதுக்க கோரிக்கை
கோவை, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டிகளை மதுரை கோட்டத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை, ஜூலை.
கோவை, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டிகளை மதுரை கோட்டத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிருந்தாவன், கோவை எக்ஸ்பிரஸ்
தென்னக ரெயில்வேயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. பெங்களூருவுக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதில், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 44 வருடங்களாக ஓடிக்கொண்டுள்ளது. பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சுமார் 57 வருடங்களாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த 2 ரெயில்களும் பகல் நேர அதிவிரைவு ரெயில்களாகும்.
அத்துடன், இந்த ரெயில்கள் பாரம்பரியமிக்க ரெயில்களாக அறியப்பட்டுள்ளன. இந்த ரெயில்களில் அடுத்த மாதம் முதல் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. பொதுவாக பழைய ரெயில் பெட்டிகளை வடமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
மதுரை கோட்டத்துக்கு
ஆனால், இந்த ரெயிலின் பெட்டிகளை தென்னக ரெயில்வே கோட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், மதுரை கோட்டத்தை பொறுத்தமட்டில் ரெயில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருச்செந்தூர்-தூத்துக்குடி, தூத்துக்குடி-நெல்லை, நெல்லை-செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்குவதில் சிரமம் உள்ளது.
மேலும், மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு ரெயில்கள் இயக்குவதிலும் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக உள்ளது. எனவே, புதிய பெட்டிகள் இணைக்கப்படும் ரெயில்களின் பழைய பெட்டிகளை மதுரை கோட்டத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story