வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மந்திரி ஈசுவரப்பா உத்தரவு


மந்திரி ஈசுவரப்பா
x
மந்திரி ஈசுவரப்பா
தினத்தந்தி 10 July 2021 1:36 AM IST (Updated: 10 July 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி ஈசுவரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மண்டியா: ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி ஈசுவரப்பா உத்தரவிட்டுள்ளார். 

ஆலோசனை கூட்டம்

மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மந்திரி நாராயணகவுடா, கலெக்டர், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துெகாண்டனர். 
இந்த கூட்டத்தில் மந்திரி ஈசுவரப்பா பேசியதாவது:- 

வளர்ச்சி பணிகள்...

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவியது. ஊரடங்கு உள்பட அரசு எடுத்த கடும் கட்டுப்பாடுகளால் கொரோனா 2-வது அலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் கிராமப்புறங்களில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வளர்ச்சி பணி விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கக்வடாது. 

கொரோனாவில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. கிராம மக்களை தடுப்பூசி போட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா குறித்தும், தடுப்பூசி குறித்து கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

தடுப்பூசி மட்டுமே ஒரே வழி

கொரோனா 2-வது அலை கிராமப்புறங்களில் தான் அதிகமாக பரவியது. இதற்கு காரணம், மக்கள் மத்தியில் கொரோனா மற்றும் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், கிராமப்புறங்களில் உள்ள 18 வயதுக்குட்பட்டவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 

 கிராமப்புறங்களில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டும் தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story