ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 July 2021 1:46 AM IST (Updated: 10 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

பத்ராவதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினார்.

சிவமொக்கா: பத்ராவதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினார்.

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் பி.எச். சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் புகுந்துள்ளார். அவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் அவரால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த நிலையில் மறுநாள் காலையில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க ஒருவர் சென்றுள்ளார். அப்போது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பாா்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

இதுகுறித்து கனரா வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் பத்ராவதி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

அப்போது ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த கண்காணிப்பு கேமராவில், மர்மநபர் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

வாலிபர் கைது

இந்த நிலையில், வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் பத்ராவதி அருகே பசிலிகட்டே கிராமத்தை சேர்ந்த அசாதுல்லா (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் தான், வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து இரும்பு கம்பியால் எந்திரத்தை உடைக்க முயன்றதும், உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. 

இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story