அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆலங்குளம், சாத்தூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள ராசாப்பட்டி, ஏ. லட்சுமிபுரம், மாதாங்கோவில்பட்டி, நதிக்குடி, ஆகிய கிராமங்களில் உள்ள காளியம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு தரிசனம் செய்தனர். அதேபோல சாத்தூர் முக்குராந்தல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story