ஆஸ்திரேலிய பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி வியாபாரி மீது வழக்குப்பதிவு
ஆஸ்திரேலிய பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த பெங்களூரு வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,
பெங்களூரு: ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் இமி ஹிஷினுமா(வயது 25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் பெங்களூருவுக்கு வந்த இமிக்கு, ஜாவித் அகமது என்ற வியாபாரியுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது தான் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதாக ஜாவித் அகமது இமியிடம் கூறி உள்ளார்.
இதை நம்பிய இமி, தான் ஜப்பான் மற்றும் துபாய்க்கு சுற்றுலா செல்ல விசா மற்றும் ஓட்டல் வசதி செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். இதற்காக இமி பல்வேறு தவணைகளில் ஜாவித் அகமதுவுக்கு ரூ.36 லட்சம் கொடுத்தார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஜாவித் அகமது, இமியை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்பாமல் மோசடி செய்துவிட்டார். இதையடுத்து இமி, ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் இமி, பெங்களூருவில் உள்ள தனது நண்பர் தனுஷ் மூலம் இதுபற்றி கோரமங்களா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் புகாரை வாங்க மருத்துள்ளனர். பின்னர் இந்த மோசடி குறித்து பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் கோரமங்களா போலீசார் ஜாவித் அகமது மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாவித் அகமது காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story