டிராக்டர் மோதி சிறுவன் பலி; விபத்துக்கு காரணமான வாலிபர் தற்கொலை
குண்டலுபேட்டை அருகே வாலிபர் ஓட்டிய டிராக்டர் மோதி சிறுவன் பலியானான். இந்த வேதனையில் விபத்துக்கு காரணமான வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கொள்ளேகால்: குண்டலுபேட்டை அருகே வாலிபர் ஓட்டிய டிராக்டர் மோதி சிறுவன் பலியானான். இந்த வேதனையில் விபத்துக்கு காரணமான வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விளையாட்டு மைதானம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா சவக்கனாபாளையா அருகே சாபுரானஹள்ளியை சேர்ந்தவர் நாகய்யா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் சுனில் (வயது 24). இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள காலி நிலத்தை விளையாட்டு மைதானமாக ஆக்க சீர் செய்யும் பணி நடந்தது.
இதற்காக டிராக்டர் கொண்டு நிலத்தில் மண் கொட்டி சீரமைத்தனர். இதற்கான ஏற்பாட்டை சுனில் மற்றும் அவரது நண்பர்கள் செய்திருந்தனர்.
டிராக்டர் மோதி சிறுவன் பலி
இந்த நிலையில் டிராக்டர் டிரைவர் சாப்பிட சென்றுவிட்டார். இதனால் டிராக்டரை சுனில் ஓட்டிள்ளார். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் ஹர்ஷா (5) என்ற சிறுவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது டிராக்டர் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிருக்கு போராடினான். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிறுவன் ஹர்ஷாவை குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுனில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சுனில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தன்னால் தான் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கருதி மனவேதனையில் சுனில் தற்கொலை முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டர் மோதி சிறுவன் உயிரிழந்ததால் டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story