கடப்பாரையால் அடித்து மகன் கொலை


கடப்பாரையால் அடித்து மகன் கொலை
x
தினத்தந்தி 10 July 2021 2:42 AM IST (Updated: 10 July 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

கடப்பாரையால் அடித்து மகனை கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜா என்ற சின்ராசு(வயது 30). இவருக்கு திருமணமாகி மோகனப்பிரியா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கூலித்தொழிலாளியான ராஜா, தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ராஜாவை, கடப்பாரையால் தலையில் தாக்கிவிட்டு ராஜேந்திரன் தப்பி ஓடிவிட்டார். இதில் ராஜா மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய ராஜேந்திரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story