மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மது விற்ற பரணம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், நாகல்குழி கிராமத்தை சேர்ந்த உதயசூரியன், பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதானவர்களை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story