அனுமதியின்றி மணல் அள்ளப்பட்ட டிராக்டர் பறிமுதல்


அனுமதியின்றி மணல் அள்ளப்பட்ட டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2021 2:42 AM IST (Updated: 10 July 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மணல் அள்ளப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் போலீசாருக்கு கல்லாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கல்லாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் டிராக்டரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டதும், அந்த டிராக்டர் பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 35) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story