மின்வாரிய ஊழியர் வீட்டில் நகை திருட்டு
மின்வாரிய ஊழியர் வீட்டில் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கிரின் சிட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 34). மின்வாரிய ஊழியரான இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7-ந்தேதி ஆலத்தூர் தாலுகாவில் கொளத்தூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் தினேஷ் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 2 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், டி.வி. ஒரு வெள்ளி அரைஞாண் கொடி மற்றும் ரூ.51 திருட்டு போயிருந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story