வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி பட்ட தெருவில் வசித்து வருபவர் அறிவழகன். இவருடைய மகன் மாவீரன்(வயது 23). இவரது தாய் இறந்து விட்ட நிலையில் தந்தை மறுமணம் செய்து கொண்டதால், அண்ணன் மற்றும் தங்கையை மாவீரன் உழைத்து அதன்மூலம் கிடைத்த வருவாயில் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது தங்கையிடம் வீட்டில் சாப்பாடு போடச் சொல்லி கேட்டதாகவும், ஆனால் அவரது தங்கை சமைக்காமல் இருந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மனமுடைந்த மாவீரன் வயலுக்கு பயன்படுத்தி விட்டு மீதம் வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாவீரனின் அண்ணன் வீரமணிகண்டன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story