ஆனி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் ரூ.53 லட்சத்துக்கு காய்கறி-பழங்கள் விற்பனை
ஆனி அமாவாசையையொட்டி நேற்று உழவர் சந்தைகளில் ரூ.53 லட்சத்துக்கு காய்கறி- பழங்கள் விற்பனை ஆனது.
சேலம்:
ஆனி அமாவாசையையொட்டி நேற்று உழவர் சந்தைகளில் ரூ.53 லட்சத்துக்கு காய்கறி- பழங்கள் விற்பனை ஆனது.
ஆனி அமாவாசை
அமாவாசை தினத்தன்று காலையில் பொதுமக்கள் அவரவர் குல தெய்வங்களை நினைத்து சாமி கும்பிடுவார்கள். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்து வீடுகளில் காய்கறிகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விற்பனை அதிகம் நடைபெறும்.
அதன்படி நேற்று சேலத்தில் ஆனி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் அதிகம் விற்பனை ஆனது. இதற்காக காலையிலேயே மாநகரில் உள்ள அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி ஆகிய 4 உழவர் சந்தைகளில் வழக்கத்தை விட அதிகமாக பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள மற்ற 7 உழவர் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அம்மாபேட்டை சந்தை
பின்னர் அவரவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வாங்கிச்சென்றனர். நேற்று ஒரே நாளில் அம்மாபேட்டை உழவர் சந்தையில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 135-க்கு காய்கறி-பழங்கள் விற்பனை ஆகின. அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 498-க்கும், சூரமங்கலம் உழவர் சந்தையில் ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 850-க்கும், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 27-க்கும் விற்பனை ஆனது.
இதே போன்று எடப்பாடி உழவர் சந்தையில் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 702-க்கும், மேட்டூர் உழவர் சந்தையில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 350-க்கும், ஆட்டையாம்பட்டி உழவர் சந்தையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து159-க்கும், தம்மம்பட்டி உழவர் சந்தையில் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 705-க்கும், இளம்பிள்ளை உழவர் சந்தையில் ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 10-க்கும், ஆத்தூர் சந்தையில் ரூ.10 லட்சத்து 18 ஆயிரத்து 564-க்கும், ஜலகண்டாபுரத்தில் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 710-க்கும் விற்பனை ஆனது.
கூட்டம் அலைமோதியது
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் நேற்று ஆனி அமாவாசையை யொட்டி ஒரே நாளில் ரூ.53 லட்சத்திற்கு காய்கறி, பழங்கள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே போன்று சேலம் பால் மார்க்கெட், ஆற்றோர மார்க்கெட், முதல் அக்ரஹாரம், கருங்கல்பட்டி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் நேற்று காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story