ரவுடிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- சேலம் உதவி கலெக்டர் நடவடிக்கை


ரவுடிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- சேலம் உதவி கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 July 2021 4:14 AM IST (Updated: 10 July 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

ரவுடிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அயோத்தியாப்பட்டணம்:
வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், அப்போதைய சேலம் உதவி கலெக்டரிடம் இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று பிணைய பத்திரம் எழுதி கொடுத்தார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் குணசேகரனிடம் தகராறில் ஈடுபட்ட தண்டபாணி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என பிணைய பத்திரம் எழுதி கொடுத்த நிலையில் அதை மீறி செயல்பட்டதால் காரிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து, உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து அவர் தண்டபாணிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Next Story