சேலத்தில் பணம் வைத்து சூதாடிய 18 பேர் கைது-ரூ.88 ஆயிரம் பறிமுதல்
சேலத்தில் பணம் வைத்து சூதாடிய 18 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலத்தில் பணம் வைத்து சூதாடிய 18 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாட்டம்
சேலம் மாநகரில் ஒரு சில இடங்களில் பணம் வைத்து சூதாடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பாபு தலைமையில் போலீசார் எஸ்.எம்.சி. காலனி ஆற்றோரம் கிழக்கு தெரு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 52), சேலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (58), மல்லமூப்பம் பட்டியை சேர்ந்த பெருமாள் (47), சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த சேட்டு (58), ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சங்கீதராமன் (36), ஆசாத் தெருவை சேர்ந்த முஸ்தபா (55), முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி (50), தர்மபுரியை சேர்ந்த வேதாபுரி (67), சுந்தரம் (54) கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவி (48), கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (36), நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலத்தை சேர்ந்த சண்முகம் (65), சேலம் பட்ைடக்கோவில் பகுதியை சேர்ந்த ரங்கா (40), ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சையத்அலி (55), குமரன் தெருவை சேர்ந்த கார்த்திக் (30), அம்மாபேட்டையை சேர்ந்த மூர்த்தி (59), பெரமனூரை சேர்ந்த மகேந்திரன் (59) என்பது தெரிய வந்தது.
18 பேர் கைது
இதையடுத்து பணம் வைத்து சூதாடிய 17 பேர் மற்றும் மனமகிழ்மன்ற உரிமையாளர் முகமது என மொத்தம் 18 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரத்து 380 மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story