சின்ன காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை
சின்ன காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
உடல்நிலை பாதிப்பு
சின்ன காஞ்சீபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு. தனியார் பட்டு நிறுவன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேணுகா (வயது 40) என்ற மனைவியும், சங்கீதா (21), புவனா (17) என்ற மகள்களும் உள்ளனர்.ரேணுகா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுறுவதை பார்த்த இளைய மகள் புவனா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.நேற்று அன்பு வேலைக்கு சென்று விட்டார். சங்கீதா அருகாமையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்கொலை
மதிய உணவுக்கு வந்த அன்பு நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் தனது உறவினர் ஒருவருடன் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மின்விசிறி கொக்கியில் சேலையின் ஒருபுறம் ரேணுகாவும், மறுபுறம் புவனாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாய், மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாயின் மீது அதிக பாசம் கொண்டதால் தாயுடன் இணைந்து மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story