ஆனி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பொதுமக்கள் திரண்டனர்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலை சுற்றியுள்ள இடங்களில் ஆங்காங்கே படுத்துக் கொண்டிருந்தனர். அப்போது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் சாமி தரிசனம் செய்ய காத்து கிடந்தனர். ஆனால் கோவில் குளத்தில் பக்தர்கள் குளித்து நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அருகே பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அதை தொடர்ந்து அவர்கள் கோவில் வளாகம் முன்பு சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக சாமியானா பந்தல் போட்டு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Related Tags :
Next Story