நண்பர்களுடன் மது அருந்திய போது வெட்டு: ரவுடி சிகிச்சை பலனின்றி சாவு


நண்பர்களுடன் மது அருந்திய போது வெட்டு: ரவுடி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 10 July 2021 11:12 AM IST (Updated: 10 July 2021 11:12 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் (வயது 35).

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த இவர், கடந்த 4-ம் தேதி நள்ளிரவு புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள காலி மைதானத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தினார்.அப்போது, ஏற்பட்ட தகராறில் மற்றொரு ரவுடியான ஜெகன், கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில்பலத்த காயமடைந்த ரவுடி ரிஸ்க் பாஸ்கர், கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ரிஸ்க் பாஸ்கரின் நண்பர்களான ஜெகன் (28), கார்த்திக் (28), பிரேம் குமார் (32) மற்றும் வினோத் (26) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்து உள்ளனர். இந்தநிலையில் மேற்கண்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.

Next Story