நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம், 

நாகை அபிராமி அம்மன் திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் பாபு கான் தலைமை தாங்கினார். கிளை தலைவர் ஆழியூர் சாஹா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மொய்தீன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஷேக் அலாவுதீன் கலந்து கொண்டு பேசினார்.

ஸ்டான்சாமியின் சிறை மரணத்தைக் கண்டித்தும், சமூக செயற்பாட்டாளர்கள் மீது போடப்படும் போலி வழக்குகளை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story