பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2021 5:22 PM IST (Updated: 10 July 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சீர்காழி, 

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் கலந்து கொணடு பேசுகையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் மாதம் ரூ.10,000 உதவி தொகை வழங்க வேண்டும் என்றார். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story