போளூர் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்கு கட்டிடங்கள் அகற்றும் பணி தொடங்கியது
போளூர் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்கு கட்டிடங்கள் அகற்றும் பணி தொடங்கியது
போளூர்
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், வந்தவாசி உட்கோட்டத்தில் செய்யூர், வந்தவாசி, போளூர் சாலை மற்றும் இ.சி.ஆர். இணைப்பு சாலை மேம்பாடு செய்யப்படுகிறது. இதற்கு நில ஆர்ஜீதம் செய்யப்பட்டு உரிய இழப்பீடு தொகை அரசு ஏற்கனவே வழங்கியது. போளூர் அடுத்த கரைப்பூண்டி, மண்டகொளத்தூர் ஆகிய கிராமங்களில் சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள கட்டிடங்களை, அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
உதவி செயற்பொறியாளர் ருத்ரா தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், தரணி, பாஸ்யம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story