100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
100 நாள் வேலை வழங்கக்கோரி தொழிலாளர்கள் காளசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கண்ணமங்கலம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனால் ஊராட்சி அலுவலகம் தற்போது சேவை மையக்கட்டிடத்தில் செயல்படுகிறது. நேற்று காலை கிராம சேவை மையக்கட்டிடத்தில் இயங்கி வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 100 நாள் திட்ட பெண் தொழிலாளர்கள் சுமார் 20 பேர் முற்றுகையிட்டு தங்களுக்கு பணி வழங்கக்கோரி ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணியாளர்களுக்கு பணி வழங்கக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
100 நாள் வேலை வழங்க கோரிக்கை
இது சம்பந்தமாக பணித்தள பொறுப்பாளர் கூறுகையில், ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் பணி வழங்கக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார். முற்றுகைப் போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில் கடந்த வாரம் வேலை வழங்கவில்லை. இந்த வாராமாவது எங்களுக்கு பணி வழங்கக்கோரி ஊராட்சி செயலரிடம் கேட்டோம். ஏற்கனவே கடந்த வாரம் வேலை செய்த பணியாளர்களுக்கே இந்த வாரமும் பணி வழங்கியுள்ளனர். எனவே அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும் என்றனர்.
இந்த சம்பவகத்தால் காளசமுத்திரம் ஊராட்சி அலுவலகம் முன்பு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story