பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை மாடுகள் மூலம் கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை மாடுகள் மூலம் கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2021 7:23 PM IST (Updated: 10 July 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவை மாடுகள் மூலம் கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இரா.அருள், எஸ்.சுரேஷ், எம்.நாகராஜ், பிரேம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக அவர்கள் பஸ் நிலையம் அருகில் இருந்து ஆட்டோவை மாடுகள் மூலம் கட்டி இழுத்து சென்று நூதன வகையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story