வாணியம்பாடி அருகே 2½ டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்


வாணியம்பாடி அருகே 2½ டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2021 9:45 PM IST (Updated: 10 July 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே 2½ டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் ரேஷன் அரிசி  கடத்தி செல்வதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில், மாநில குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் வேலூர் கோட்ட குடிமைப்பொருள் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு சோதனையை நேற்று நடத்தினர். 

வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பச்சூர் கூட்ரோடு பகுதிக்கு, வாணியம்பாடி வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 2½ டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரவீன் குமார் (வயது 21), திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story