கஞ்சா விற்ற 4 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் போலீசார் ரோந்து சென்றபோது தாளமுத்து நகர் அருகே தஸ்நேவிஸ் நகர் பகுதியை சேர்ந்த மாரிசங்கர் (வயது 21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரநயினார் (21) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற புதுக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (37), கோவில்பட்டியில் கஞ்சா விற்ற மதுரை மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (30) ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story