இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
நாகை மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி பட்டி ரோடு அருகே கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு கஞ்சா கடத்தல்
அப்போது அந்த வழியாக வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 126 கிலோ கஞ்சா இருந்தது.
இதை தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுந்தமாவடி பட்டிரோடு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் வீரமுரசு (வயது 26), செருதூர் எல்லைகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளியப்பன் மகன் கண்ணன் (26) என்பதும், இவர்கள் இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுரசு, கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 126 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story