குலசேகரன்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகள்
குலசேகரன்பட்டினம் ஊருக்குள் குரங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
குலசேகரன்பட்டினம்:
கோவில் நகரமான குலசேகரன்பட்டினத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில் ஊருக்குள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 2 குரங்குகள் கடுமையான சேட்டையில் ஈடுபட்டு வருகிறது. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்வது, கடைகளில் உள்ள தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது என தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. குரங்குகளை விரட்டினால் பொதுமக்களை ஓட, ஓட விரட்டி அச்சத்தை உண்டாக்கி வருகிறது. எனவே குரங்குகளை பிடித்துச் செல்ல மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story