ஆற்காட்டில் வீட்டில் பதுக்கிய 164 மதுபாட்டில்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கிய 164 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆற்காடு
ஆற்காடு தாலுகாவில் கடந்த வாரம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆற்காடு தோப்புக்காணா பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் தோப்புகாணா பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 164 மதுபானப் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அதை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, துணை கலால் ஆணையாளர் சத்தியபிரதாப் தலைமையில் ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர. அதன் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 600 ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story