அம்மன் கோவிலில் நகை பணம் திருட்டு


அம்மன் கோவிலில் நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 July 2021 10:24 PM IST (Updated: 10 July 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே அம்மன் கோவிலில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புத்தூர் கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை மர்ம நபர்கள் சிலர் இந்த கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் அம்மன் சிலையில் இருந்த 3 கிராம் தங்க நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். 
இதை அந்த வழியாக ஆடு மேய்ச்சலுக்கு சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி கோவில் உண்டியலை உடைத்து, நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story