ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் 167 வழக்குகளில் தீர்வு
ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில்
சிப்காட்
ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதி தெய்வீகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அதில் மோட்டார் வாகன விபத்து, அசல் வழக்கு, சிறு வழக்குகள் என மொத்தம் 167 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 42 லட்சத்து 31 ஆயிரத்து 900 மதிப்பில் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. அதில் உறுப்பினர்கள் ஏ.குத்புதீன், வி.மோகன், வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கேசவன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story