ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் போலீசார் சாராய வேட்டை
கல்வராயன்மலையில் ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் போலீசார் சாராய வேட்டை 3500 லிட்டர் ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கல்வராயன் மலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படையுடன் போலீசார் இணைந்து சாராய வேட்டை நடத்தி சாராய ஊறலை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையில் ஆள் இல்லா குட்டி விமானத்தின் உதவியோடு போலீசார் தீவிர சாராய வேட்டையில் களம் இறங்கினர். அப்போது எருக்கம்பட்டு வனப்பகுதியில் 15 பேரல்களில் சாராய ஊறல் வைத்திருந்ததை குட்டி விமானம் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 15 பேரல்களில் இருந்த 3 ஆயிரம் லிட்டர் சாரய ஊறல் மற்றும் 410 லிட்டர் சாராயம் ஆகியவற்றை தரையில் கொட்டி அழித்தனர். அவற்றை பதுக்கி வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story