சின்னசேலம் அருகே லாரி மோதி பெண் பலி


சின்னசேலம் அருகே  லாரி மோதி பெண் பலி
x
தினத்தந்தி 10 July 2021 10:36 PM IST (Updated: 10 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே லாரி மோதி பெண் பலி டிரைவர் கைது


சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த குரால் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பழனிமுத்து மனைவி மூக்காயி (வயது 50). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலைக்காக கூகையூர் சென்றார். பின்னர் அங்கிருந்து கூகையூர் அக்ரகாரம் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன்(49) என்பவரிடம் லிப்ட் கேட்டு மேட்டார் சைக்கிளில் குரால் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  அப்போது பின்னால் ஆயுர்வேத மருந்து ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூக்காயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், எலத்தகிரியை சேர்ந்த பெரியநாயகம் மகன் இமானுவேல்(29) என்பவரை கைது செய்தனர்.


Next Story