வேட்டவலம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு


வேட்டவலம் அருகே  மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 July 2021 10:47 PM IST (Updated: 10 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

வேட்டவலம்

வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கிராமம் ரங்கநாதன் மனைவி பவுனம்மாள் (78) என்பவர் தனியாக  வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 8-ந் தேதி இரவு 10.30 மணி இடியுடன் கூடிய மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பவுனம்மாள் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 2 மர்ம நபர்கள் பவுனம்மாளின் வாயைப்பொத்தி கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் வைத்திருக்கும் நகைகளை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இருந்த 5 பவுன் நகைகளை எடுத்தபோது அதனைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, வேட்டவலம் இன்ஸ்பெக்டர் நிலவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பவுனம்மாளிடம் விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story