அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு
ஊட்டியில் உள்ள அரசு அலுவலகங்களை நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
ஊட்டி,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை அரசு அலுவலகங்களை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு அலுவலகங்களை நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு வளாகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், தலைமை தபால் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள் மற்றும் வெளி பகுதிகளில் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பிற இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களும் சுத்தம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story