கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு


கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
x
தினத்தந்தி 10 July 2021 10:53 PM IST (Updated: 10 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தாா்.

விக்கிரவாண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 45). இவரது மகன் விக்னேஷ்(15). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டியில் உள்ள சித்தப்பா சக்திவேல் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை தேடி வந்தனர்.  இந்த நிலையில் சக்கரபாணி என்பவரது விவசாய கிணற்றில் விக்னேஷ் பிணமாக மிதந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இயற்கை உபாதை கழித்து விட்டு கால் கழுவுவதற்காக கிணற்றில் இறங்கியபோது விக்னேஷ் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story